கர்நாடக மாநிலத்தில் நடக்கும் குளிர்காலச் சட்டசபைக் கூட்டத்தொடரில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தலுக்கு தடை செய்யும் மசோதாவை அறிமுகம் செய்ய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு திட்டமி்ட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடக்கும் குளிர்காலச் சட்டசபைக் கூட்டத்தொடரில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தலுக்கு தடை செய்யும் மசோதாவை அறிமுகம் செய்ய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு திட்டமி்ட்டுள்ளது.
பாஜக எம்எல்சி என் ரவிக்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுக்கஉள்ளார். அதாவது மாநிலத்தில் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு சான்றுஅளிக்கும் உணவுகளைத் தவிர வேறு எந்தசான்றுளிக்கும் உணவுகளையும், குறிப்பாக ஹலால் உணவுகளை விற்கத் தடை கொண்டுவர மசோதா கொண்டுவர உள்ளார்.
எதிரிகளின் ஏவுகணைகளை அழி்க்கும் ஐஎன்எஸ் ‘மர்மகோவா போர்க்கப்பல்’ அம்சங்கள் என்ன?
ஏற்கெனவே இந்த ஆண்டு உகாதி பண்டிகையின்போது, இந்துத்துவா அமைப்புகள், ஹலால் இறைச்சி சாப்பிடுவதைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. ஹலால் உணவுகளைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் எனகோரிக்கையும் விடுத்திருந்தன.
எம்எல்சி ரவிகுமார் இந்த மசோதாவை, தனிநபர் மசோதாவாக கொண்டு வர உள்ளார், இது தொடர்பாக ஆளுநர் தவார்சந்த்கெலாட்டுக்கும் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் பல்வேறு விவகாரங்களை கிளப்பி, குறிப்பாக இந்துத்துவா விவகாரங்களை முன்னிறுத்தி பாஜக அரசியல் செய்யத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதிதான், ஹலால் இறைச்சிக்கு தடை கோரும் மசோதாவாகும்.
வருகிறது ‘வந்தே மெட்ரோ ரயில்’: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி
இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையை எம்எல்சி ரவிகுமார் இன்றுகாலை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சந்தையை அதிகாரபூர்வமற்ற சிலர், அடையாளத்தை வைத்து கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து சந்தையை முழுமையாக மீட்க மசோதா அவசியம் என ரவிகுமார் முதல்வர் பொம்மையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவை பாஜக அரசு அறிமுகம் செய்தால், அதை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சி தயாராகிவிட்டது. சட்டசபை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கே.காதர் கூறுகையில் “ ஆளும் பாஜக அரசு தனது தோல்விகளை,ஊழல்களை மறைக்க இதுபோன்ற மசோதாக்களை கொண்டுவருகிறது. வரும் தேர்தலில் வாக்காளர்களை மதரீதியாக பிளவுப்படுத்த இந்த ஹாலால் தடை மசோதாவை அந்தக்கட்சி கொண்டுவருகிறது” எனத் தெரிவித்தார்
கர்நாடக சட்டசபைக்குள் வீர சவார்க்கர் புகைப்படம்: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம்
இந்த குளிர்காலக் கூட்டத்தில் கர்நாடக அரசு, 14 மசோதாக்களை கொண்டுவர உள்ளது.அதில் தனியார் வேலைவாய்ப்புகளில் கன்னடமக்களுக்கு இடஒதுக்கீடு, எஸ்சிஎஸ்டி பிரிவு மசோதா உள்ளிட்டவையாகும்.