INS Mormugao: எதிரிகளின் ஏவுகணைகளை அழி்க்கும் ஐஎன்எஸ் ‘மர்மகோவா போர்க்கப்பல்’ அம்சங்கள் என்ன?

By Pothy Raj  |  First Published Dec 19, 2022, 1:57 PM IST

எதிரி நாடுகளின் ஏவுகணைகளை, ஆயுதங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் மர்மகோவா கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 


எதிரி நாடுகளின் ஏவுகணைகளை, ஆயுதங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் மர்மகோவா கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பல் போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து கோவா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டு கொண்டாடப்படும் அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 
இந்தக் கப்பலின் 70 சதவீத பாகங்கள், பொருட்கள், கட்டுமானம் அனைத்தும் உள்நாட்டிலேயே அமைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே பெரும்பகுதி அமைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் புராஜெக்ட் 15-ஏ திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் சென்னை ஆகிய 3 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த 4 போர்க்கப்பல்களுமே எதிரிநாட்டு படையின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்தவை.

அலர்ட்! சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை இன்று வெளியீடு?

மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் ஐஎன்எஸ் மர்மகோவா  போர்க்கப்பல் கடந்த 2015ம் ஆண்டு கட்டும்பணி தொடங்கி, 2016ம் ஆண்டில் முடிந்தது. ஏறக்குறைய பல்வேறு கட்டப் பரிசோதனைகள் ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலுக்கு நிகழ்த்தப்பட்டு 2021, டிசம்பர் 15ம் தேதி அனைத்து  பரிசோதனைகளையும் இந்தக் கப்பல் முடித்தது.

ஐஎன்எஸ் மர்மகோவா கப்பல் 163 மீட்டர் நீளமுடையது, 17.4 மீட்டர் அகலமுடையது, 73ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. இந்தக் கப்பலில் 350க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் பயணிப்பார்கள். இதில் 50 அதிகாரிகள், 250 வீரர்கள் அடங்கும். வீரர்களுக்கு தங்குமிடம், உடற்பயிற்சிக் கூடம், அலுவலகம், மருத்துவமனை என அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் மர்மகோவா கப்பல் மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில்(மணிக்கு55கி.மீ)  செல்லும் திறன் கொண்டது. எதிரிகள் கப்பலின் ராடாரில் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கும் திறன் மர்மகோவா போர்க்கப்பலுக்கு உண்டு. இந்த கப்பலில் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை ஏவு முடியும், அந்த ஏவுகணையும் பொருத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் பராக்-8 அதநவீன ராக்கெட்டுகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. அணுஆயுதம், ரசாயனத் தாக்குதல், உயிரியல் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினாலும் அதிலிருந்து தப்பிக்கும்வகையில் கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. 127மீட்ட் மெயின் கன், 4 ஏகே 630 30எம்எம் எந்திரத் துப்பாக்கி ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஊழல்,அழுக்குசாலை,மாசு! இந்தியாவில் யதார்த்தம் இதுதான்!இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேச்சு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 533 டார்படோ லாஞ்சஞர்கள், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆர்பியு-6000 வகை ராக்கெட் லாஞ்சர்கள் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.  மேலும், கப்பலில் இருந்து சீ கிங் மற்றும் துருவ் ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். 

கடந்த 2014ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்திய கடற்படையில் 14 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட 150 கப்பல்கள் உள்ளன. இந்திய கடற்படையை வலுப்படுத்த பிரதமர் மோடி தீவிரமாக திட்டமிட்டுள்ளார். வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியக் கடற்படையில் 200 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்குள் வீர சவார்க்கர் புகைப்படம்: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம்

கொச்சியில் ஐஎன்எஸ் விஷால் போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது, இந்த கப்பல் 2030ம் ஆண்டில் கடற்படையில் முறைப்படி இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர 45 போர்க்கப்பல்களும் கட்டப்பட்டு வருகின்றன

click me!