Karnataka : கர்நாடக மாநிலம் மைசூரில் கணவர் ஒருவர் தனது 3வது மனைவி வீட்டிற்குள் உள்ள ஒரு அறையில் பல மாதங்களாக பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் தனது மனைவி குறித்து ஒருவித சந்தேகம் கலந்த பயத்துடன் இருந்து வந்த நபர் ஒருவர், தனது மனைவியை வீட்டின் அறையில் பல வாரங்களாக அடைத்து வைத்திருந்ததாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபரோடு திருமணம் ஆனதில் இருந்து, தான் அந்த அறைக்குள் அடைக்கப்பட்டதாக அந்த இளம் பெண் கூறினார்.
இந்நிலையில் போலீசார் அவரை மீட்டு அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண் அளித்த பகீர் வாக்குமூலத்தில், அந்த கணவர் வேலைக்கு செல்லுமுன் தன்னை அந்த அறையில் வைத்து பூட்டுவார் என்றும், அந்த அறையில் கழிப்பறை வசதி இல்லாததால் ஒரு அட்டை பெட்டியை தான் பயன்டுத்திக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கட்டாய உடலுறவில் ஈடுபட்ட சித்தப்பா போக்சோவில் கைது
"எங்கள் குழந்தைகள், அவர்களின் பள்ளி நேரம் முடிந்த வீடு திரும்பினாலும், என் கணவர் வீட்டிற்குள் நுழையும் வரை தான் அந்த அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக இரு குழந்தைகளுக்கு தாயான அந்த பெண் கூறியுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், கூலித்தொழிலாளியான அந்த கணவர், வேலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டுக்குள் அந்த பெண்ணை வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் அளித்த தகவலில் தனது கணவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், மாறாக தன்னை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டால் போதும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, அந்த இரு பெண்களையும் அந்த நபர் விவாகரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.