Hemant Soren : ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அவர்களை சிறையில் அடைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெறும் 48 வயதே நிரம்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரன், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன்னதாக ஓராண்டு காலம் அவர் ஜார்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவர் எம்எல்ஏவாகவும், எம் பி ஆகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நில மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் கடந்த பல நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி பலமுறை சம்மணம் அனுப்பப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சோரன் அவர்களுடைய வீட்டிலேயே விசாரணை நடைபெற்றது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அடிமைகளாக உள்ளன - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
அவர் வீட்டில் நடந்த விசாரணையை தொடர்ந்து ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 27ஆம் தேதி ஜனவரி அன்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் சில பகிர் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் ஜார்க்கண்டில் இல்லாத நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல சொகுசு கார்களும், சுமார் 36 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் மற்றும் பிற ஆவணங்களும் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஹேமந்த் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும், இதனால் பதட்ட நிலையை குறைக்க ராஞ்சியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜனவரி 27 ஆம் தேதி டெல்லி சென்ற நிலையில் நேற்று ஜனவரி 31ம் தேதி அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த துவங்கியது அமலாக்கத்துறை. சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்று இரவு 8:30 மணிக்கு இது முடிவடைந்ததாகவும். அதன் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரை சிறப்பு காவலில் எடுத்து விசாரிக்க ராஞ்சி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுகொடுத்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைக்க இப்போது ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 12ல் ஆரம்பம்; 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு