ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை! வெளியான முதல் வீடியோ... எதிர்க்கும் முஸ்லீம்கள்!

By SG Balan  |  First Published Feb 1, 2024, 6:07 PM IST

ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் பாதாள அறையில் இந்துக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் குழு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாள், அங்கு பூஜைகள் தொடங்கியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பூசாரி ஒருவர் ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்தினார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தாத்தா தான் டிசம்பர் 1993 வரை அதே சிவலிங்கத்துக்கு பூஜை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் பாதாள அறையில் இந்துக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் குழு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பள்ளி மாணவிகளை தனியே அழைத்து பாலியல் வன்கொடுமை! 2 வருடமாக குற்றவாளிக்கு உதவிய 9 வயது சிறுவன்!

Puja started at gyanvyapi pic.twitter.com/ZjcWYnklCG

— Vishnu Shankar Jain (@Vishnu_Jain1)

ஹிந்து தரப்பு மனுதாரர்கள் ஞானவாபி மசூதியின் சீல் செய்யப்பட்ட அடித்தளத்தில் தொழுகை நடத்த அனுமதிக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முஸ்லீம் தரப்பு கோரியுள்ளது.

முன்னதாக, மசூதிக்குள் பூஜை செய்ய அனுமதிக்கும் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக, இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, “வாரணாசி நீதிமன்ற உத்தரவுப்படியே மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுப்புகளை சரிசெய்து, தினசரி வழிபாடு தொடங்கபட்டுள்ளது" என்றார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 12ல் ஆரம்பம்; 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு

click me!