இது என்ன பாஜகவுக்கு வந்த சோதனை.. கர்நாடக அமைச்சர்கள் 8 பேர் பின்னடைவு..

By Ramya s  |  First Published May 13, 2023, 11:02 AM IST

கர்நாடக அமைச்சரவையில் இருந்த 8 அமைச்சர்கள் பின்னடவை சந்தித்துள்ளனர்.


நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய போது காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 117 இடங்களிலும் பாஜக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஜேடிஎஸ் 30 இடங்களிலும் மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

குறிப்பாக பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். கனகபுரா தொகுதியில் போட்ட அமைச்சர்கள் அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் சுரேஷ்குமார் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Latest Videos

இதையும் படிங்க : கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவுக்கு வருமாறு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க : காங்கிரஸ் தனது தலைவர்களை ரிசார்ட்டுக்கு அனுப்புகிறதா? டி.கே.சிவக்குமார் பதில்

click me!