கர்நாடகாவில் வெற்றி பெற்றதா ஜெய் பஜ்ரங் தளம்? பாஜகவை மடக்குவதற்கு ஆம் ஆத்மி வழியில் சென்ற காங்கிரஸ்!!

By Dhanalakshmi G  |  First Published May 13, 2023, 10:47 AM IST

கர்நாடகா மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பஜ்ராங்தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் அதிரடியாக அறிவித்து இருந்தது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
 


கர்நாடகா மாநிலத்தில் பெரிய அளவில் பஜ்ரங் தளம் இருப்பைக் கொண்டுள்ளது. இவர்கள் அனுமனை வழிபாடு செய்பவர்கள். இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் கர்நாடகாவில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்பதுதான் பொதுவான கருத்து. இந்த முறையும் பாஜகவால் இந்த பிரச்சாரம் கையில் எடுக்கப்பட்டது. இதற்கு சந்தர்ப்பம் கொடுத்தவர்கள் காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் பஜ்ரங் தளம் தடை செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இதற்கு பாஜக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பிரதமர் மோடியும் இதை பிரச்சாரத்தில் குறிப்பிட்டு இருந்தார். வாக்குகள் பதியும்போது ஜெய் பஜ்ரங்கி என்று கூறி வாக்கு செலுத்த வேண்டும் என்று கோரி இருந்தார். இதையடுத்து மாநிலத்தில் தேர்தல் போக்கே சிறிது மாறியது என்று கூறலாம். ஆனால், உடனடியாக சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி காங்கிரஸ் அதுமாதிரி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று பல்டி அடித்தார்.

Latest Videos

காங்கிரஸ் தனது தலைவர்களை ரிசார்ட்டுக்கு அனுப்புகிறதா? டி.கே.சிவக்குமார் பதில்

ஆனாலும், பாஜக பெரிய அளவில் இதை தேர்தலுக்கு பயன்படுத்தியது. அனுமன் போன்று வேடமிட்டு மாநிலம் முழுவதும் பஜ்ரங் தளம் அமைப்பினர் அனுமன் ஸ்லோகம் வாசித்தனர். இறுதி நேரத்தில் தேர்தலின்போக்கு மாறுகிறது. கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால், கர்நாடகா மக்கள் இதை புறம்தள்ளி விட்டனர் என்பதைத்தான் இதுவரையிலான தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் வேலை வாய்ப்பின்மை, நந்தினி பால் பாக்கெட் சர்ச்சை, ஊழல், ஹிஜாப் போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்ட்டைப் போன்றே கர்நாடகா மாநிலமும் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கும் மாநிலம். லட்சக்கணக்கான விவசாயிகள் நந்தினி பால் வருமானத்தை நம்பி இருக்கின்றனர். இதை சரியான நேரத்தில் கையில் எடுத்தது காங்கிரஸ். அந்த மாநிலத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விவசாயிகள். 

சிம்லா ஹனுமன் கோயிலில் பிரியங்கக காந்தி! கர்நாடக மக்களுக்காகப் பிரார்த்தனை

இவற்றைப் பார்க்கும்போது, இந்த தேர்தலில் மக்கள் உள்ளூர் பிரச்சனைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மாநிலக் கட்சியால் தான் மாநிலத்தின் தேவைகளை, பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகின்றனர். இரட்டை இஞ்சின் என்ற கோஷமும் கைகொடுக்கவில்லை. 

இறுதி நேரத்தில் எந்தப் பிரச்சனை பாஜகவால் கையில் எடுக்கப்பட்டதோ அதே அனுமன் கோவிலுக்கு இன்று பிரியங்கா காந்தி சென்று வழிபாடு செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை சிம்லாவில் உள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதே தந்திரத்தைத்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பின்பற்றி இருந்தார். பாஜகவை கையாள வேண்டும் என்றால் அனுமனை கையில் எடுக்க வேண்டும் என்ற தந்திரத்தை அவரும் கற்று வைத்து இருந்தார். காங்கிரசும் தற்போது அந்த வழியில் செல்லத் துவங்கியுள்ளது.

click me!