கர்நாடகாவில் எழுச்சி பெற்ற காங்கிரஸ்! தென் இந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை! நெட்டிசன்கள் கருத்து

Published : May 13, 2023, 03:25 PM ISTUpdated : May 13, 2023, 03:28 PM IST
கர்நாடகாவில் எழுச்சி பெற்ற காங்கிரஸ்! தென் இந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை! நெட்டிசன்கள் கருத்து

சுருக்கம்

பெரும்பான்மை 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அதற்கு மேலாகவே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வெற்றி தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்தச் சூழலில் ட்விட்டரில் அது குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கப்போவது உறுதி ஆகியுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 138 தொகுதிகளிலும், பாஜக 62 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஜனதா தளம் (எஸ்) 20 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 4 சுயேச்சைகள் முன்னிலையிலும் உள்ளனர். பெரும்பான்மை 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அதற்கு மேலாகவே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வெற்றி தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்தச் சூழலில் ட்விட்டரில் அது குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

“என் தந்தை முதல்வராக வேண்டும்” குழப்பம் நீடிக்கும் நிலையில் சித்தராமையாவின் மகன் பேட்டி

காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்ராவும் டி.கே. சிவக்குமார் போன்ற தலைசிறந்த தலைவர்கள் முன்னின்று கட்சியை ஒருங்கிணைத்ததும் தான் வெற்றிக்குக் காரணம் என பாராட்டத் தொடங்கியுள்ளனர். பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் இந்த வெற்றியை அந்தக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

சுக்கு நூறாக உடைந்த தேர்தல் வியூகம்.. தென் இந்தியாவில் இருந்து வாஷ் அவுட்டான பாஜக..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!