கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்த சுனில் கனுகோலு யார்?

By Dhanalakshmi G  |  First Published May 13, 2023, 2:41 PM IST

தற்போது தேர்தலுக்கு யூகங்களை வகுப்பதற்கு என்று ஒரு ஆலோசகர் தேவைப்படுகிறார். அவரது  வழியில் செல்லும்போது எளிதில் வெற்றியும் வசப்படுகிறது என்பது அரசியல்வாதிகளின் கணக்காக இருக்கிறது.
 


கடந்த 2018ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த சுனில் கனுகோலு இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார். இந்த தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்து இருந்த கருத்தில், இந்தமுறை நாங்கள் கர்நாடகாவில் ஐந்து முறை ஆய்வு நடத்தி இருந்தோம். இறுதியில் சில இடங்களைத் தவிர்த்து, வேட்பாளர்கள் சுனி கனுகோலு கொடுத்த ஆலோசனையின் பேரில் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதன் அடிப்படையில் 70 முக்கிய இடங்களை அடையாளம் கண்டு இருந்தோம். அகில இந்திய அளவில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் அழைத்து இருந்தோம்.

கடந்த மே மாதம், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் 2024 மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் சுனில் கனுகோலுவை உறுப்பினராக நியமித்தார். இதில் பி. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே சி வேணுகோபால், அஜய் மக்கன், பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ரந்தீப் சிங் போன்ற மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா. 

Latest Videos

“ என் தந்தை முதல்வராக வேண்டும்” குழப்பம் நீடிக்கும் நிலையில் சித்தராமையாவின் மகன் பேட்டி..

காங்கிரஸின் தேர்தல் ஆலோசகராக கனுகோலு சேர்ந்த பின்னர் கிஷோர் வாய்ப்பை இழந்தார். கிஷோரைப் போல சுனில் ஆன்லைனில் இல்லை. சுனிலுக்கு என்று தனித்துவத்துடன் செயல்படுகிறார்.  பிரிவதற்கு முன்பு 2014-ல் சுனிலும், கிஷோரும் இணைந்து பணியாற்றி வந்தனர். 

தேர்தல் ஆலோசகரான கிஷோரிடமிருந்து பிரிந்து வந்த பின்னர் கனுகோலு 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் “நமக்கு நாமே” பிரச்சாரத்தை வடிவமைத்து கொடுத்தார். இது வெற்றியடைந்து ஸ்டாலினின் பொது இமேஜை உயர்த்தி இருந்தாலும், வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. அப்போது, திமுக தோற்றது, ஆனால் தலைவராக ஸ்டாலின் உருவெடுத்தார் என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து அப்படியே டெல்லி சென்ற கனுகோலு அமித் ஷாவுடன் பிப்ரவரி 2018 வரை நெருக்கமாக பணியாற்றினார். 300 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் உட்பட பாஜகவுக்கு வெற்றிகளை தேடிக் கொடுத்தார் சுனில். பிரச்சாரங்களை பாஜகவுக்கு வடிவமைத்துக் கொடுத்து இருந்தார்.

சுக்கு நூறாக உடைந்த தேர்தல் வியூகம்.. தென் இந்தியாவில் இருந்து வாஷ் அவுட்டான பாஜக..

2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, திமுகவுக்கு ஆலோசனை வழங்கிய சுனில் தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 இடங்களில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார்.

2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, திமுகவுக்கு ஆலோசனை வழங்கிய சுனில் தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் 38 இடங்களில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார்.

ஆனால், கிஷோரின் ஆலோசனையை 2021 சட்டசபை தேர்தலில் திமுக ஏற்றுக் கொண்டு இருந்தது. இதற்கு முன்னதாக கிஷோரிடம் இருந்து சுனில் விலகி இருந்தார். அ.தி.மு.க.,வுக்கு சுனில் மாறினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வருவதை அப்போது தடுக்க முடியவில்லை. அதே ஆண்டு, சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தியதை அடுத்து, கனுகோலுவின் நிறுவனமான மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் சேவையை கர்நாடகாவிற்கு காங்கிரஸ் அமர்த்தியது. 

click me!