சோனியாவுக்கும், மக்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்!!

By Dhanalakshmi G  |  First Published May 13, 2023, 2:09 PM IST

நான் சிறையில் இருக்கும்போது என்னை நேரில் வந்து சோனியா காந்தி சந்தித்தை என்னால் மறக்க முடியாது என்று கண்ணீருடன் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்தார். 


கர்நாடகா தேர்தல் முடிவுகளில் இதுவரையிலான நிலவரப்படி காங்கிரஸ் 135 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், ஜேடிஎஸ் 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் தோல்விக்கான காரணாம் ஆராயப்படும் என்று பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

முன்னதாக பேட்டியளித்து இருந்த சித்தராமையா, மல்லிகார்ஜுனே கார்கே போன்றவர்கள் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பேட்டியளித்து இருக்கும் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கும் டிகே சிவகுமார், ''தேர்தலில் வெற்றி பெற பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தனிப்பெரும்பானமையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து இருக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?

பாஜகவினர் என்னை சிறையில் தள்ளினர். அப்போது, சிறையில் என்னை சந்திக்க வந்திருந்த சோனியா காந்தி அவர்களை மறக்க மாட்டேன் என்று கூறும்போது (மனம் உடைந்து அழுதார்) காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

மோடி, அமித்ஷா கர்நாடகாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. சித்தராமையா பேட்டி

click me!