மோடி, அமித்ஷா கர்நாடகாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. சித்தராமையா பேட்டி

By Ramya s  |  First Published May 13, 2023, 1:15 PM IST

மோடி, அமித்ஷா கர்நாடகாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ள


ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனமும் இன்று கர்நாடகாவின் பக்கம் திரும்பி உள்ளது. கர்நாடகாவில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 119 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதையும் படிங்க : பின்னடவை சந்தித்த பாஜக.. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்.. நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Latest Videos

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்ப்து கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. அதன்படி வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்து வர ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 117 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரும்பான்மையைப் பெறுவோம் என்ற தங்களது கணிப்பு உண்மையாகி வருவதாகவும், “காங்கிரஸ் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வரும்” என்றும் சித்தராமையா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கர்நாடகாவில் எத்தனை முறை பேரணி நடத்தினாலும், அது மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கர்நாடகாவில் வெற்றி பெற்றதா ஜெய் பஜ்ரங் தளம்? பாஜகவை மடக்குவதற்கு ஆம் ஆத்மி வழியில் சென்ற காங்கிரஸ்!!

click me!