காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய போது காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் மொத்தம் 6 மண்டலங்களில், ஹைதராபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா மற்றும் மைசூர் ஆகிய 3 மண்டலங்களில் காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 118 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும், ஜேடிஎஸ் 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள காங்கிரஸ் தொடண்டர்கள் டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு உற்சாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு வெடித்தும் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : இது என்ன பாஜகவுக்கு வந்த சோதனை.. கர்நாடக அமைச்சர்கள் 8 பேர் பின்னடைவு..
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்து கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது. அதன்படி வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களை அழைத்து வர ஹெலிகாப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாளை நடைபெற இந்த கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதையும் படிங்க : கர்நாடகாவின் அடுத்த காங்கிரஸ் முதல்வர் இவர்தானா? விட்டுக் கொடுப்பாரா சித்தராமையா?