விரைவில் நடைபெற உள்ள கர்நாடக தேர்தல்லில் பாஜக 110-120 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
எடுபிரஸ் குழு நடத்திய கருத்துக் கணிப்பில், கர்நாடகாவில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 முதல் 30 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, பாஜக 110-120 இடங்களிலும், அருகிலுள்ள போட்டியான காங்கிரஸ் 70-80 இடங்களிலும் வெற்றி பெறும். மதச்சார்பற்ற ஜனதா தளம் 10 முதல் 15 இடங்களையும், மற்றவை 4 முதல் 9 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் பிசிஃபாலஜி அமைப்பான எடுபிரஸ் குழு, மாநிலத்தின் 50 தொகுதிகளிலும், 183 வாக்குச் சாவடிகளிலும் 18,331 நபர்களிடம் கணக்கெடுப்பை நடத்தியது. கருத்துக்கணிப்பு ஆய்வாளரும், எடுபிரஸ் குழுமத்தின் தலைவருமான ஜார்ஜ்குட்டி ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது, கருத்துக்கணிப்பின்படி, மொத்த வாக்குகளில் பாஜக 43 சதவீதத்தைப் பெறும், காங்கிரஸ் 37 சதவீத வாக்குகளைப் பெறும்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா கர்நாடகாவின் மிகவும் பிரபலமான தலைவர் என்று கணக்கெடுக்கப்பட்டவர்களில் 23 சதவீதம் பேர் அவரை முதல்வர் வேட்பாளராக ஆதரித்தனர். முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், அடுத்த பிரபலமான தலைவர் என்றும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 22 சதவீதம் பேர் அவரை அடுத்த முதலமைச்சராக விரும்புவதாகவும் கணக்கெடுப்பு கணித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா 20 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே சிவகுமார் 19 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார் சிவக்குமார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான எச்.டி. குமாரசாமிக்கு மக்களிடையே 10 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால், தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை வெறும் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதையும் படிங்க..புது ரூட்டில் திரும்பிய ஓபிஎஸ்.. நிம்மதியா விடமாட்டாங்க போலயே - புலம்பும் எடப்பாடி பழனிசாமி
தற்போதைய முதல்வர் பொம்மை மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஆளும் வட்டாரத்தில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் பாஜகவை பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலின்போது கர்நாடக பாஜகவின் முகத்தை மாற்றினால் பாஜகவுக்கு சாதகமான பலன் அமையும் என்றும் கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் பாஜக ஆட்சி நீடிக்கவே வாக்காளர்கள் விரும்புகின்றனர்.
தொடர்ந்து பேசிய ஜார்ஜ்குட்டி, “நாங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்த கணக்கெடுப்பை நடத்துவோம். இது ஆரம்ப நாட்கள், பாஜக தெளிவான இலக்கை கொண்டு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் நெருக்கமாக செல்கிறது. முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவின் தூய்மையான அரசியல்வாதி என்றும் இதில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ