2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது கர்நாடக மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் இளைஞர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளது. 80 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் கூடியுள்ளது.
கர்நாடகாவில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2018 முதல் 34.76 சதவீதம் அதிகரித்துள்ளது, இது மாநிலத்தின் அனைத்து வயதினரையும் விட அதிகமாக உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. 2018ல் 9,02,226 ஆக இருந்த 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2023ல் 12,15,920 ஆக அதிகரித்துள்ளது.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும்.
undefined
18-19 வயதுக்குட்பட்ட, முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 9.26 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018ல் 10,72,221 ஆக இருந்தது, 2023ல் 11,71,558 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2018 இல் 5.06 கோடியாக இருந்து தற்போது 5.3 கோடியாக சற்று அதிகரித்துள்ளது.
பெலகாவியில் மராட்டி ஓட்டைப் பிரிக்கும் 3வது சக்தி! பாஜக கோட்டையைத் தகர்க்குமா காங்கிரஸ்?
70-79 வயதிற்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 25.97% உயர்ந்துள்ள 5.95 லட்சமாக உள்ளது. அதே நேரத்தில் 60-69 வயதிற்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 17.3 சதவிகிதம் அதிகரித்து 7.92 லட்சமாக இருக்கிறது. இரண்டு பிரிவுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளன. 20-29 வயது வாக்காளர்கள் எண்ணிக்கை 2018 இல் 1,10,93,005 ஆக இருந்து இப்போது 99,30,534 ஆக 10.47 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அடுத்த பிரிவான 30-39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2.66 சதவீதம் குறைந்து 1,31,55,666 லிருந்து 1,28,04,740 ஆகச் சரிந்துள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி கர்நாடக தேர்தலுக்கான சிறப்பு அதிகாரி சூர்யா சென் தெரிவித்துள்ளார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை பெருக்கத்தையும், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும்போது பல பெயர்களை நீக்கியதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் அளிக்கும் தகவலின்படி, கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 2.39 கோடி வாக்காளர்கள் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆண் வாக்காளர்கள் 2.66 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.63 கோடி பேரும் உள்ளனர். திருநங்கைகளைக் குறிப்பிடும் 'மற்றவர்கள்' பிரிவில் 4,927 பேர் இருக்கிறார்கள்.
ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!