பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் ரோடு ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் சூறாவளிப் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று பெங்களூருவில் 36 கி. மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தியுள்ளார். வழியெங்கும் மக்கள் கூடியிருந்து மோடிக்கு பூ தூவி வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் வெளியிட்டு இருந்த தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பிரதமரும் இதை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார். வாக்களிக்கும்போது ஜெய் பஜ்ரங் தள் என்று கூற வேண்டும் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, தேர்தலின் போக்கு மாறுவதை அறிந்த காங்கிரஸ் தடை செய்யும் தீர்மானத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. மாநில அரசால் இது முடியாது என்று தெரிவித்தனர். தற்போது, பாஜகவுக்கு தேர்தல் ஆயுதமாக பயன்பட்டுள்ளது. மோதிய வரவேற்க இன்று வந்த பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அனுமார் போல வேடமணிந்து வந்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹாவேரி மாவட்டத்திற்கு மோடி செல்கிறார். அப்போது அவருக்கு ஏலக்காயால் உருவாக்கப்பட்ட மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்படுகிறது. இவற்றை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் தயாரித்துள்ளனர்.
ஹாவேரி ஏலக்காய் போன்ற பொருட்களுக்கு பெயர் பெற்றது. இந்த மாவட்டத்தின் கலாச்சார அடையாளமே ஏலக்காய் தான். படவேகரா குடும்பம் ஏலக்காயில் தலைப்பாகை மற்றும் மாலையை உருவாக்கி உள்ளனர். கலைஞர் ஹைதர் அலி என்பவர் மோடிக்காக இந்த சிறப்பு தலைப்பாகையை உருவாக்கி உள்ளார்.
PM Modi : பிரதமர் மோடியை வரவேற்று, கைக்குழந்தையுடன் சாலையில் நின்றிருந்த குடும்பம்!