மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரு நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் 'நாக மண்டபத்தை' சனிக்கிழமை திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீக பணிகளை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரு நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் 'நாக மண்டபத்தை' சனிக்கிழமை திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீக பணிகளை துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல்வர் திரு. பொம்மை, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்பணித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
இதையும் படிங்க - சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈஷாவுக்கு விலக்கு.. மத்திய அரசு சொன்ன புது தகவல் !
ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றி குறிப்பிட்ட முதல்வர் திரு. பொம்மை அவர்கள், "மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குரு அவர்களின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப்பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நன்மை தருகின்ற வகையில் மண்ணின் தரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. சத்குரு நமது விவசாயிகளின் இதயங்களில் இருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க - ஈஷா-விற்கு எதிரான அவதூறு செய்தி கட்டுரையை முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆன்மீக உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய சத்குரு, "சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை, எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் ஆகியவை அமைக்கப்படும்". மேலும் இந்த செயலில் ஈடுபட மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் நாக மண்டபத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, எனவே உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன." என்றார்.