டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ வழக்கை வாபஸ் பெற கர்நாடக அரசு ஒப்புதல்!

By Manikanda Prabu  |  First Published Nov 24, 2023, 1:19 PM IST

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ வழக்கை வாபஸ் பெற அம்மாநில காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது


கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக சிபிஐ விசாரித்து வரும் சொத்து குவிப்பு வழக்கை வாபஸ் பெறுவதற்கு கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய பாஜக அரசு டி.கே.சிவக்குமார் மீதான இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை மாநில காவல்துறை அல்லது ஊழல் தடுப்பு ஆணையமான லோக் ஆயுக்தாவிடம் ஒப்படைக்க கர்நாடக உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவு மாநில அமைச்சரவை முன் வைக்கப்பட்டது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, நீதிமன்றத்தை அணுகுவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது. 

Latest Videos

undefined

சிவக்குமார் மீதான வழக்கை வாபஸ் பெற கர்நாடக மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சசி கிரண் ஷெட்டி முன்மொழிந்தார். முன்னதாக, எடியூரப்பா அரசாங்கத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு டி.கே.சிவக்குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் அந்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திமுக முக்கிய பிரமுகர்களை சுத்து போடும் அமலாக்கத்துறை... கதிர் ஆனந்தை தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் சம்மன்.!

சிபிஐ விசாரணை முடிந்துவிட்டதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம், சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வருகிற ஜனவரி மாதம் வரை அவகாசம் அளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்க இயக்குனரகம் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், சிபிஐயும் அவருக்கு எதிராக தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. அதற்கு அப்போதைய எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது.

click me!