இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி...!

Published : Dec 30, 2018, 05:21 PM IST
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி...!

சுருக்கம்

கர்நாடகாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கர்நாடகா மாநிலம் சமராபுரி என்ற இடத்தில் கார் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது. திடீரென எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பனிமூட்டம் காரணத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் என்பது தெரிவந்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானுடன் ஒன்றிணையும் 2 முஸ்லிம் நாடுகள்.. உலகமே நடுங்கும் பேராபத்தான ஒப்பந்தம்..!
சித்திரவதையின் நரகம்..! பாஜக ஆட்சியில் நாட்டில் பரவும் பேராசையின் தொற்றுநோய்... ராகுல் அட்டாக்..!