கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக தேர்தல் பரப்புரைகளில் நடிகர், நடிகைகளும் ஈடுபடுத்தப்படுவர். அந்த வகையில் கர்நாடக தேர்தலிலும் சினிமா பிரபலங்களை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப், தர்ஷன் ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... கர்நாடகாவில் குவிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்? காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் ரெய்டா?
பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடக்கும் சந்திப்பில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் கிச்சா சுதீப்பும், தர்ஷனும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவருக்குமே கர்நாடகாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் அவர்களை வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வெற்றிவாகை சூட பாஜக பக்காவாக பிளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Karnataka Assembly Elections 2023: கர்நாடகாவில் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! 6 நாளில் ரூ.48 கோடி பறிமுதல்!