காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்படுவதாக என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது ரெய்டு நடத்த நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடகப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஸ்கிரீனிங் கூட்டத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, “பிஜேபியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் மீண்டும் தங்கள் தொகுதியில் போட்டியிட மறுக்கிறார்கள். பாஜகவால் அதன் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை." என்றார்.
undefined
மேலும், கர்நாடகாவில் பாஜகவில் இருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள். சுமார் 10 எம்எல்ஏக்கள், எம்எல்சிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்சிகள் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்துள்ளனர்” என்றும் சுர்ஜேவாலா கூறினார்.
காங்கிரஸ் ஆதரவாளர்களைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் குற்றம்சாட்டினார். “காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது ரெய்டு நடத்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேர்தலில் எங்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள்” என சிவக்குமார் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாஜக ஆட்சியை இழக்கும் கவலையில் இருப்பதாகத் தெரிவித்தார். "கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான சூழல் உள்ளது. பாஜக ஆட்சியை இழக்கும் பயத்தில் உள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர்களை குறிவைக்க வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு எந்த காங்கிரஸ் தலைவரும் பயப்படுவதில்லை” என சித்தராமையா குறிப்பிட்டார்.
சமீபத்தில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
பெங்களூருவில் கனமழை: சென்னைக்கு திருப்பி வைக்கப்பட்ட 14 விமானங்கள்