சீனாவுக்கு கல்வான் பள்ளத்தாக்கை பரிசாக அளித்தமைக்காக, தேசத்தின் மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கு கல்வான் பள்ளத்தாக்கை பரிசாக அளித்தமைக்காக, தேசத்தின் மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பு படைகளுக்கும் உயிர்பலி ஏற்பட்டது. இந்த பதற்றத்துக்குப்பின், இரு தரப்பும் எல்லையில் படைகளைக் குவித்தன.
மக்களின் வங்கி கணக்கில் பணம்... தீபாவளி பரிசு கொடுத்த புதுச்சேரி முதல்வர்!!
இந்த பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவத் தலைவர்களுக்கும் இடையே நடந்த பலகட்டபேச்சுக்குப்பின் பதற்றம் தணிந்தது, இருதரப்பு படைகளும் கல்வான் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெற சம்மதித்தன. ஆனால், கல்வான் உள்ளிட்ட பகுதிகளை சீனா இணைத்துக்கொண்டதாக உலகிற்கு கூறி வருகிறது, இதற்கு இந்தியா தரப்பில் மறுப்புத் தெரிவித்தாலும், கடுமையாக வலியுறுத்தவில்லை.
இதைச் சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “ கல்வான் பள்ளத்தாக்கில் சீனா வெற்றி பெற்றுவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகிற்கு அறிவித்து வருகிறார். ஆனால், 18 முறை சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு நடத்திய பிறகும் சீன அதிபரின் பேச்சு, பாரத மாதாவை புண்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
ஆம்! 2020-ல் நம் ராணுவ வீரர்களின் தீரத்துக்கும் வீரத்துக்கும் பிறகும்கூட அங்கிருந்து ராணுவப்படையை விலக்கியதன் மூலம் நாம் சீனாவுக்கு கல்வானை பரிசாக அளித்துவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விளாசியுள்ளார். அதில் “ ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், தங்களின் தேசத்தின் வரைபடத்தை தலைவர்களுக்கு வழங்கினார். அதில் லடாக், அருணாச்சலப்பிரதேசம் தங்களின் பகுதியாக சீனமொழியில் காட்டப்பட்டுள்ளது.
சீன மொழியில் எழுதப்பட்ட வரைபடம் வழங்கப்பட்டதாக நான் கூறியதற்கு ஆதாரத்தை ட்விட்டரில் கேட்கிறார்கள். ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் சீனாவின் வரபட நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது, பிரதமர் மோடிக்கும் ஒரு நகல் வழங்கப்பட்டது.
ஆனால், மோடி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரா. அவரிடம் கேளுங்கள். இந்தியாவுக்கு கடைசி அடியாக, சீனா மொழியில் எழுதப்பட்ட அந்த வரைபடத்தை ரஷ்யாவும் ஏற்றுக்கொண்டதுதான். பிரதமர் மோடி தேசநலனுக்கு தோரம் செய்துவிட்டார்”எனத் தெரிவித்துள்ளார்.