'பெண் கடவுள் காளி என்னைப் பொறுத்த வரை மாமிசம் சாப்பிடும், மதுவை ஏற்றுக் கொள்ளும் ஒரு கடவுள்தான்' என்று அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
'பெண் கடவுள் காளி என்னைப் பொறுத்த வரை மாமிசம் சாப்பிடும், மதுவை ஏற்றுக் கொள்ளும் ஒரு கடவுள்தான்' என்று அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், கவிஞருமான லீனா மணிமேகலை வெளியிட்டு இருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளது. உயிரே போனாலும் இதை எதிர்கொள்வேன் என்று லீனா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
போஸ்டரில் காளி தோற்றத்தில் ஒரு பெண் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், LGBT சமூகத்தின் கொடியையும் கையில் பிடித்துக் கொண்டு இருப்பதைப் போன்று போஸ்டரில் புகைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து இவருக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #ArrestLeenaManimekalai என்ற ஹெஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!
இந்த நிலையில் இன்று தனியார் சேனல் ஒன்றின் சிறப்பு நிகழ்ச்சியில் அளித்திருந்த பேட்டியில் மஹுவா மொய்த்ரா, ''என்னைப் பொறுத்தவரை பெண் தெய்வம் காளி புகைபிடிப்பவர்தான், மாமிசம் சாப்பிடுபவர்தான். ஒவ்வொருவரும் தங்களுடைய கடவுளை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் பெண் கடவுளுக்கு விஸ்கி கொடுக்கின்றனர். சில இடங்களில் கடவுளை மதிப்பற்ற வகையில் சித்தரிக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பெண் கடவுளை தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டு இருப்பதாகக் கூறி, இயக்குநர் மணிமேகலை மீது உத்தரப்பிரதேசம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவியல் சதி, வழிப்பாட்டு தலத்தில் குற்றம், மத உணர்வுகளை வேண்டும் என்றே தூண்டுதல், அமைதியை குலைக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் காளி போஸ்டரை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். கனடாவில் டொரண்டோவில் இருக்கும் அகா கான் மியூசியத்தில் இருக்கும் காளி புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று கனடா அரசாங்கத்திற்கு இந்திய உயர் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.
பல்வேறு தரப்புக்களிலும் இருந்து எழும் எதிர்ப்பையும் மீறி #arrest Leena manimekalai என்ற ஹேஸ்டேக்கை நிறுத்தி விட்டு, அனைவரும் #love you Leena manimekalai என்ற ஹேஸ்டேக்கை பதிவிட வேண்டும் என்று லீனா மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.