மும்பையில் 3 நாட்களுக்கு மிக கன மழை.! ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்..அவசர ஆலோசனையில் முதலமைச்சர்

By Ajmal KhanFirst Published Jul 5, 2022, 4:52 PM IST
Highlights

மும்பையில்  பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காலை முதல் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

மும்பையில் கன மழை

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் நேற்று  காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மிக அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர்  களமிறங்கியுள்ளது. மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மும்பை பகுதியில்  கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ரயில் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டது.

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல வழித்தடங்களில் பஸ்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கடந்த  24 மணி நேரத்தில் மும்பையில்  சராசரியாக 95.81 மிமீ மழையைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 115.09 மிமீ மற்றும் 116.73 மிமீ மழை பதிவாகியுள்ளது. மும்பையில் இடைவிடாது பெய்து வரும் மழை மற்றும் அதன் காரணமாக நீர் தேங்குவதைக் கருத்தில் கொண்டு, ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது மகாராஷ்டிராவில் தேசிய பேரிடம் மீட்பு படையின் எட்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Earthquake : அந்தமான் தீவில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!

முதலமைச்சர் ஆலோசனை

இந்தநிலையில் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதன்   காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சில ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு திடீர் சரிவு.. உயிரிழப்பும் குறைவு.. நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்.!

click me!