அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு திடீர் சரிவு.. உயிரிழப்பும் குறைவு.. நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்.!

By vinoth kumarFirst Published Jul 5, 2022, 12:08 PM IST
Highlights

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடியாக நடவடிக்கை மற்றும் தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்தியால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- தமிழகத்தில் தாறுமாறாக அதிகரிக்கும் கொரோனா..இன்றைய பாதிப்பு நிலவரம் !

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்;-கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  13,086 பேருக்கு கொரோனா பாததிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,31,650ஆக உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3,322 பேருக்கும், தமிழ்நாட்டில் 2,654, மகாராஷ்டிராவில் 1,515 உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

குழந்தைகளை எளிதில் தாக்கும் கொரோனா..? பள்ளிகளில் முக கவசம் கட்டாயம்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில், 12,456 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,91,933ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,14,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக 24 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25, 242ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 198 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 11,44,805 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,51,312 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

click me!