தெலுங்கானாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 12 முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட 35 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியின் 12 முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது சந்திரசேகர ராவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த 35 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்னாள் எம்பி பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ், முன்னாள் எம்எல்ஏக்கள் பன்யம் வெங்கடேஸ்வரலு, கோரம் கனகய்யா, கோட்டா ராம் பாபு ஆகியோர் இன்று காங்கிரசில் இணைந்தனர். சட்டமன்ற மேலவை உறுப்பினர் நர்சா ரெட்டியின் மகன் ராகேஷ் ரெட்டியும் காங்கிரஸில் இணைந்தார்.
எவ்வளவு தேடியும் எதுவும் கிடைக்காமல் 100 ரூபாயைக் கையில் கொடுத்துச் சென்ற வழப்பறி கொள்ளையர்கள்!
முன்னாள் எம்பி பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ் ஆகியோரும் காங்கிரசில் இணைந்தனர். பாட்னாவில் நடந்த மெகா எதிர்க்கட்சி கூட்டத்தை ராஷ்டிர சமிதி புறக்கணித்த பின், அந்தக் கட்சியில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் அவர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள் கட்சி மாறி இருப்பது கேசிஆர் கட்சிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஷ்டிர சமிதி தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், கணிசமான எண்ணிக்கையிலான இடங்களை வெல்வோம் என்றும் கேசிஆர் கூறியிருந்தார்.
வந்தே பாரத் ரயில் கழிப்பறைக்குள் அலப்பறை! மர்ம நபரை கதவை உடைத்து வெளியே இழுத்த ரயில்வே!