பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அசத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

Published : Jun 26, 2023, 07:02 PM ISTUpdated : Jun 26, 2023, 07:12 PM IST
பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அசத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

சுருக்கம்

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி டீக்கடைக்குச் சென்று மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அசத்தினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்துவரும் மம்தா பானர்ஜி ஒரு டீக்கடைக்குச் சென்று டீ போட்டு அனைவருக்கும் வழங்கினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று பிரச்சாரம் செய்யச் சென்ற மம்தா பானர்ஜி, ஜல்பைகுரியில் உள்ள மல்பஜாரில் ஒரு டீக்கடைக்குச் சென்றார். அங்கு மக்களுக்கு தேநீர் தயாரித்து பரிமாறினார். மம்தா இவ்வாறு டீ கொடுத்து மக்களைக் கவர்வது இது முதல் முறை அல்ல. தான் செல்லும் பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் சென்று டீ போட்டு கொடுத்து அப்பகுதி மக்களுடன் உரையாடுவதை வாடிக்கையாகச் செய்துவருகிறார்.

வந்தே பாரத் ரயில் கழிப்பறைக்குள் அலப்பறை! மர்ம நபரை கதவை உடைத்து வெளியே இழுத்த ரயில்வே!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கிராம் வழியாகச் சென்ற மம்தா சாலையோர டீக்கடை முன்பாக வாகனத்தை நிறுத்தினார். அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடிய அவர், மக்களுக்கு பக்கோடா பரிமாறினார். அதற்கு முன் 2019ஆம் ஆண்டு திகா பகுதிக்குச் சென்ற மம்தா பானர்ஜி, ஒரு தேநீர் கடைக்குச் சென்று, மக்களுக்கு தேநீர் தயாரித்து வழங்கினார்.

திங்கட்கிழமை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி, "மத்தியில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறோம். ஆனால் வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்து வருகின்றன." என்றார். மம்தாவின் கருத்துக்கு பதிலளித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பிஜேபிக்கு எதிரான போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து அந்த மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனிடையே,  வன்முறை நிகழ்வுகள் தொடராமல் தடுக்க 33,700 வீரர்கள் துணை ராணுவப் படை வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்புவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு தேடியும் எதுவும் கிடைக்காமல் 100 ரூபாயைக் கையில் கொடுத்துச் சென்ற வழப்பறி கொள்ளையர்கள்!

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!