Jawad Cyclone: இன்று மாலை புயல் கரையை நெருங்கும் - ரெட் அலர்ட் எச்சரிக்கை

By Thanalakshmi VFirst Published Dec 5, 2021, 4:47 PM IST
Highlights

வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, இன்று மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, இன்று மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

ஆந்திர-ஒடிசாவை அருகில் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள ஜாவத் புயல் இன்று மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கக்கடலில் ஒடிசாவின் பூரி அருகே நீடித்து நிற்பதாக கூறப்பட்டுள்ளது. துறைமுகம் அருகே நீடிக்கும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கில் நகரக்கூடும் எனவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறி, இன்று மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

புயலானது வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக, ஒடிசா கடலோர பகுதியில் நிலைக்கொண்டுள்ளதால் அங்கு கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் அம்மாநிலத்தில் புரி, கட்டாக் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மேற்கு வங்க கடல் பகுதியை அடையும் என்பதால் அம்மாநிலத்தில் திகா உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல நகர்ந்து, அந்தமான் அருகே கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. 

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, புயலாக வலுப்பெற்றது. அந்தமான் அருகே வங்க கடலில் உருவான இந்த புயலுக்கு ’ஜாவத்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலானது, வடக்கு ஆந்திரா மற்றும் கிழக்கு ஒடிசா கடல் பகுதிகளில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. 

புயல் காரணமாக, ஆந்திரம் ,ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் நிலைக்கொண்ட ஜாவத் புயலானது, வலுவிழந்து ஒடிசா மாநிலம் புரி  அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை கரையை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!