"செல்லாத பணத்தை மாற்ற ஆளாய் பறக்கும் மக்கள்" - ரூ.500 கோடியில் மகளுக்கு திருமணம் செய்யும் முன்னாள் அமைச்சர்…!

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 08:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
"செல்லாத பணத்தை மாற்ற ஆளாய் பறக்கும்  மக்கள்" - ரூ.500 கோடியில் மகளுக்கு திருமணம் செய்யும் முன்னாள் அமைச்சர்…!

சுருக்கம்

மத்திய அரசின் அறிவிப்பால், பொதுமக்கள் ரூ.2000க்கு ஏடிஎம் வாசல்களில் கால் கடுக்க காத்திருக்கும் நிலையில், கர்நாடகா தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன் ரெட்டி, தனது மகள் திருமணதை ரூ.500 கோடியில் நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சுரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கும் கோடீஸ்வரர் ஜனார்த்தன் ரெட்டி, தனது மகள் பிராமினியின் திருமணத்தை ரூ.500 கோடியில், இன்று மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

பழங்கால அரச குடும்பத்தில், இளவரசிக்கு திருமணம் நடப்பதுபோல், தனது மகளின் திருமணத்தையும் அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதனால், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் திருமணத்திற்கு 30 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்த விருந்தினர் படடியலில் சில பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்களும் அடங்கியுள்ளன. விருந்தினர்கள் பலர் ஹெலிகாப்டர்களில் வர இருப்பதால் திருமணம் நடைபெறும் இடத்தின் அருகே 15 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருமணத்துக்கு வருபவர்கள் தங்குவதற்கு பெங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் 1,500 நட்சத்திர ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரச குடும்பத்தில் திருமணம் நடப்பதுபோலவே தனது மகளின் திருமணத்தையும் நடத்த, அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டித் திட்டமிட்டுள்ளார்.

இந்த திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரில் பேலஸ் மைதானத்தில் 36 ஏக்கரில் 14ம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் மருவடிவத்தில் அசத்தலான தோற்றத்திலும், ஹம்பி நகரத்தில் உள்ள விஜயா விட்டாலாவை ஒத்திருக்கும் வகையில் திருமண மண்டபமும் திருமணம் நடைபெறும் இடத்தில் திருப்பதி கோயில் போன்றும் வெங்கடேஸ்வரரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்கு திருப்பதி திருமலை கோவிலில் இருந்து, 8 வேதம் ஓதுபவர்களுக்கும் வருகின்றனர். அரங்கில் அமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா உருவச்சிலையின் முன்பாக பிரமானி - ராஜிவ் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கானப் பணிகளை ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 கலைஞர்கள் அரண்மனை போன்றே உருவாக்கி உள்ளனர். 

திருமணத்துக்கு இந்தோனேஷியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர்களைக் கொண்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வெங்கடேஸ்வரா சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

திருமணத்தில் பாலிவுட்டின் அலியா பட், வருண் தவான், டோலிவுட் நடிகர், நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். தமிழகத்தில் இருந்து நாதஸ்வர கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் பல மாநிலங்களில் இருந்தும் கலைஞர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருமணமும் மாலையில் திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு கொடுப்பதற்காக ரூ.20 லட்சத்தில் வெற்றிலை வாங்கப்பட்டுள்ளது. அவற்றை வழங்குவதற்காக மும்பையில் இருந்து 50 மாடல்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பல்லாரியில் உள்ள குல்சார் பான் கடை உரிமையாளர் பான் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். திருமணத்திற்காக பான் தயாரிப்பவர்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில் அறை வழங்கப்பட்டுள்ளது.

மும்பை மாடல்கள், கர்நாடகா மாடல்கள் மற்றும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாடல்கள் என 50 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபலங்களுக்கு பான் எப்படி கொடுக்க வேண்டும் என்று இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திருமணத்துக்கு வருபவர்களுக்கு பல வகைகளில் பான் வழங்கப்படுகின்றன.

அரங்கத்தின் உள்ளேயே மணமக்கள் குடும்பத்தினர், முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கான வீடுகள் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு அறையும் சகல வசதிகளும் கொண்டதாக உள்ளன. இவர்கள் அனைவரும் 15, 16ம் தேதிகளில் அங்கேயே தங்குவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாநில முறைப்படி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆதிகேசவ யானைகள், ஒட்டகங்கள், ரதங்களும், பெல்லாரி பாரம்பரியம் கொண்ட டைனிங் ஹால் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருமணத்தில் அணிவதற்காக மணமகளுக்கு ரூ.17 கோடியில் சேலையும், ரூ.90 கோடியில் நகைகள் மணமகளின் தந்தை பரிசாக அளிக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு ரூ.37,86 கோடி சுரங்க ஊழல் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. ஏராளமான பண மோசடி வழக்குகளும், சுரங்க வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, தனது மகளின் திருமணத்துக்காக பரோலில் வெளியே வந்துள்ளார். வரும் 21ம் தேதி வரை அவர், பல்லாரியில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக திருமண அழைப்பிதழை எல்.சி.டி அழைப்பிதழ்களாக அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் நகரில் ஒரு வேளை உணவுக்கு செலுத்த வேண்டிய ரூ100க்காக ஆயிரக்கணக்கானோர் வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது, ரூ.500 கோடியில் தனது மகளின் திருமணத்தை நடத்தி அசத்தி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

செம காண்டு.. கழுதைய வச்சு இழுத்தும் யூஸ் இல்ல.. ஷோரூம் முன்பே ஆட்டோவை கொளுத்திய இளைஞர்!
சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பிலிருந்த துப்பாக்கி வெடித்து NRI இளைஞர் உயிரிழப்பு!