Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, உள்ளே இருந்த ராணுவ வீரர்கள் திருப்பிச் சுட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் யாருக்கேனும் காயங்கள் அல்லது இறப்புகள் ஏதும் பதிவைக்கல்லாத என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. ரஜோரியின் தேரா கி கலியில் பதுங்கியிருந்து 4 வீரர்கள் கொல்லப்பட்டது மற்றும் ஐந்து பேர் காயமடைந்த பிறகு, கடந்த சில வாரங்களில் இந்தப் பகுதியில் ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனவரி 12ம் தேதி பூஞ்ச் கானேதர் மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. வெளியான அறிக்கைகளின்படி, அருகிலுள்ள மலை உச்சியில் இருந்து இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும், இது ஒரு மூத்த அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியது என்றும் தெரியவந்துள்ளது.
ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
பிர் பஞ்சால் பகுதி, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகள் 2003 முதல் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டன, ஆனால் அக்டோபர் 2021 முதல் பெரிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த ஏழு மாதங்களில், அதிகாரிகள் மற்றும் கமாண்டோக்கள் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு உதவுவதில் இந்தியாவின் எதிரிகளாக பாகிஸ்தானைக் குறிப்பதாகக் கருதப்படும். தொடர்ந்து "செயல்பாட்டுப் பங்கு" வகித்து வருவதாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தார்.
"கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களில், ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில், பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. இது கவலைக்குரிய விஷயம். 2003 க்கு முன், அந்த பகுதியில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு, 2017 வரை அமைதி மட்டுமே நிலவியது. ஆனால் இப்போது, பள்ளத்தாக்கில் நிலைமை சீராகி வருவதால், நமது எதிரிகள் அங்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்" என்று அவர் கூறினார்.
மாயமான இந்திய விமானப்படை விமானம்: 8ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு அருகே பாகங்கள் கண்டெடுப்பு!