
அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் போடப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசு மீண்டும் புதிதாக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த அறிவிக்கையை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அமைப்பினர் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனுவில் அவசர சட்டத்துக்கு மட்டுமே எங்கள் எதிர்ப்பு அல்ல அதையும் தாண்டி காளைகள் கொடுமைப்படுத்தப்படுவது உள்ளிட்ட அம்சங்களும் அடக்கம் என்று கூறியுள்ளனர்.
மற்றொருபுறம் பீட்டா மற்றும் கியூப்பா அமைப்பும் அவசர சட்டத்துக்கு எதிராக இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளன. இது ஏற்றுக்கொள்ளப்பட்டு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
இதையடுத்து தமிழக அரசும் மீண்டும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அவசர சட்டம் தாக்கல் செய்வதற்கு முன்னர் யாரும் வழக்கு போட்டால் அதில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று , ஏற்கனவே கடந்த சனிக்கிழமை இரவு அவசரச சட்டத்துக்கு ஆதரவாக கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.
தற்போது அவசர சட்டத்தை ரத்து செய்ய பீட்டா , கியூப்பா அமைப்புகள் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் , அவசர சட்டம் சட்டமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து யாராவது மனுத்தாக்கல் செய்தால் அதிலும் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதன் மூலம் அவசர சட்டத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும் போது தமிழக அரசின் தரப்புக்கும் வாய்ப்பளிக்கப்படும்.