
இந்தியாவில் நன்கொடை பெற்ற மாநில கட்சி பட்டியல் …:இரண்டாவது இடத்தில் தி.மு.க.!
இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டுவரையிலான 10 ஆண்டுகளில் அதிக நன்கொடை பெற்றமாநில அரசியல் கட்சிகள் பட்டியலில் திமுக இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கடந்த 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை நன்கொடைபெற்ற மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த வருமானத்தில், நன்கொடை, சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி வரவு, புத்தக விற்பனை போன்றவழிமுறைகளில் கிடைத்த அனைத்து தொகையும் அடங்கும்.
அதன்படி 11 ஆண்டுகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.11 ஆயிரத்து 367 கோடியே 34 லட்சம்ஆகும்.
இதில் மாநில கட்சிகளில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி 819 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுமுதலிடத்தில் உள்ளது.
அதேபோல் 203 கோடி ரூபாய் நன்கொடை பெற்று திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையடுத்து, 165 கோடி ரூபாய் நன்கொடை பெற்று அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது.
தேசிய கட்சிகளைப்பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 3,982 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
3,272 கோடி ரூபாய் நன்கொடை பெற்று பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 763 கோடி ரூபாய் பெற்று தேசிய அளவில் அதிக நன்கொடை பெற்ற மூன்றாவது கட்சியாக உள்ளது.
நன்கொடையை பொறுத்தவரை, ரூ.20 ஆயிரம் வரையிலான நன்கொடை அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைதெரிவிக்க வேண்டியது இல்லை.
அதற்கு மேல் அளிப்பவர்கள்தான், தங்களை பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் பெற்ற வருவாய், அவர்களின் ஒட்டுமொத்த வருவாயில் 69 சதவீதம்ஆகும்.
அதாவது, ரூ.7 ஆயிரத்து 833 கோடி நன்கொடையை இந்த வழியில்தான் பெற்றுள்ளன.
குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சி தனது 100 சதவீத வருமானத்தையும் இந்த வழிமுறையில்தான் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது 83 சதவீத வருவாயையும், பா.ஜனதா தனது 65 சதவீத வருவாயையும், சமாஜ்வாடி கட்சி தனது 94சதவீத வருவாயையும் இந்த வழிமுறையில்தான் ஈட்டி உள்ளன.