
அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதில், தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்காரவாத செயல்களை எதிர் கொள்ளும் இந்தியா, அமெரிக்கவுக்கு ஈடாக உள்ளது. அமெரிக்காவுக்கு நிகராக உள்ள இந்தியா எப்போதும், நட்புடன் இருக்க விரும்புகிறேன்.
இந்தியாவை உண்மையான நண்பனாக அமெரிக்கா கருதுகிறது. உலக அளவிலான சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் சிறந்த துணையாகவும் இந்தியா விளங்குகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னுடன் தொலைபேசியில் பேசியது குறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சில நிமிடங்கள் பேசிய பேச்சு, சிறப்பாக இருந்ததாகவும், அவரது அழைப்பை நான் ஏற்கிறேன். இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையேயான உறவு பலம்பெற்று இருக்கும். டிரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என நானும் அழைக்கிறேன் என கூறியுள்ளார்.