
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து புஷ்பக் எக்ஸ்பிரஸில் இருந்து குதித்த 12 பயணிகள் பலியானார்கள். குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பயத்தில் ரயிலில் இருந்து வெளியே குதித்தவர்கள் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி பலியானார்கள் என்று ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஜல்கான் மாவட்டத்தின் பச்சுரா தாலுகாவில் உள்ள பர்தாடே ரயில் நிலையம் அருகே மாலை 4:50 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள், 3 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே ஆண்டில் 16.1 கோடி! புதிய உச்சம் தொட்ட உள்நாட்டு விமானப் பயணங்கள்!
தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பீதியடைந்த சுமார் 30-35 பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், உயிரிழந்தவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துவதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ், பர்தாட் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் ரயில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ரயில் திடீரென நின்றதால், தீப்பொறி பறந்ததைப் பார்த்த சில பயணிகள் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்து, உடனே ரயிலில் இருந்து குதித்தனர். அப்போது அருகே வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் நசுங்கி பலியாகிவிட்டனர்” என்று ஒரு பயணி கூறுகிறார்.
அடேங்கப்பா! டிரம்பின் வெள்ளை மாளிகையில் இவ்வளவு வசதி இருக்கா!