மலைபோல் குவிந்து கிடக்கும் தங்கம்! 46 ஆண்டுகள் கழித்து பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

By SG Balan  |  First Published Jul 14, 2024, 4:03 PM IST

ஒடிசா முதல்வர் அலுவலகம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  46 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாத விருப்பப்படியே இன்று முதல் மூடியிருந்த அறையின் நான்கு கதவுகள் திறக்கப்பட்டன என்றும் இந்த மாபெரும் பணி வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.


ஒடிசா மாநிலத்தின் புரி ஜெகந்நாதர் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த 'ரத்ன பந்தர்' எனப்படும் பொக்கிஷ அறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1978 இல் திறக்கப்பட்ட அறை இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலின் ரத்ன பந்தர் திறக்கப்பட்டது. சனிக்கிழமையன்று, ஒடிசா அரசு ரத்ன பந்தரைத் திறப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அங்கு வைக்கப்பட்ட நகைகள் உட்பட மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இந்த நிகழ்வு குறித்து ஒடிசா முதல்வர் அலுவலகம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  46 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாத விருப்பப்படியே இன்று முதல் மூடியிருந்த அறையின் நான்கு கதவுகள் திறக்கப்பட்டன என்றும் இந்த மாபெரும் பணி வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

'ரத்ன பந்தர்' எனப்படும் பொக்கிஷ அறை இன்று மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மரப் பெட்டிகளும் ஸ்ரீ ஜெகன்னாதர் கோயிலில் தயாராக உள்ளன.

சனிக்கிழமை தோறும் ஒரே நபரைத் தேடி வந்து கொத்தும் பாம்பு! உ.பி.யில் நடக்கும் அதிசயம்!!

ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத் தலைவர் அரபிந்தா பதீ கூறுகையில், "ரத்னா பந்தரைத் திறப்பதற்கான ஒடிசா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரத்ன பந்தர் திறக்கப்படுகிறது. பல்வேறு சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏஎஸ்ஐ அதிகாரிகள், ஸ்ரீ கஜபதி மகாராஜின் பிரதிநிதிகள் மற்றும் பலர் அங்கு இருப்பார்கள். முழு நடவடிக்கையும் பதிவு செய்யப்படும். கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

"முதலில் வெளிப்புற ரத்ன பந்தரைத் திறக்க வேண்டும். உள் ரத்ன பந்தருக்கு முன் வலுவான அறை ஒன்று உள்ளது. நடவடிக்கையைக் கண்கபாணிக்க ஒரு ஸ்டிராங் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

ரத்னா பண்டரை மீண்டும் திறப்பது குறித்து பேசிய ஒடிசா சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன், "இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி முன்னிலையில் பொக்கிஷ அறையில் உள்ள பொருட்களைக் கணக்கிடும் பணிகள் நடைபெறும். எண்ணப்பட்ட பிறகு அவற்றின் டிஜிட்டல் பட்டியல் தயாரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) ரத்ன பந்தரில் பழுதுபார்க்கும் பணிகளைச் செய்யும். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்் டகோயிலின் பராமரிப்பும் தொல்லியல் துறையிடம் உள்ளது.

தகதகவென மின்னிய நீதா அம்பானி! ரேகா ஸ்டைலில் அசர வைத்த ஹைதராபாத் குர்தா, காடா துப்பட்டா!

click me!