13 தொகுதி இடைத்தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றி கெத்து காட்டும் இந்தியா கூட்டணி! பாஜகவுக்கு பின்னடைவு!

By SG Balan  |  First Published Jul 13, 2024, 4:56 PM IST

13 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இதில் இந்தியா கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வலுவை நிரூபித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியிலும் மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியிலும் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.


ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

2024 பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இந்த இடைத்தேர்தல் அதிக கவனம் பெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடுமையான போட்டி காணப்பட்டது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகவும் குறைவான வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருந்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், 13 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இதில் இந்தியா கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வலுவை நிரூபித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியிலும் மத்தியப் பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியிலும் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டது.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் எல்லார் கண்ணும் இஷா அம்பானியின் நெக்லஸ் மேலதான்... என்ன விசேஷம் தெரியுமா?

13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்:

-தமிழ்நாடு (விக்கிரவாண்டி தொகுதி): திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்திசாயத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியைத் தோற்கடித்தார். 

-மேற்கு வங்கம் (ராய்கஞ்ச் தொகுதி): டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாச பாஜகவின் மானஸ் குமார் கோஷை தோற்கடித்துள்ளார்.

-மேற்கு வங்கம் (பாக்தா தொகுதி) - டிஎம்சி வேட்பாளர் மதுபர்ணா தாக்கூர் 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பினய் குமார் பிஸ்வாஸைத் தோற்கடித்தார்.

-மேற்கு வங்கம் (ரணகாட் தக்ஷின் தொகுதி): டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட 39,048 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

-மேற்கு வங்கம் (மணிக்தலா தொகுதி) - டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே பாஜக வேட்பாளர் கல்யாண் சௌபேவை 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

-இமாச்சலப் பிரதேசம் (ஹமிர்பூர் தொகுதி): காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சர்மாவிடம் வெறும் 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

-இமாச்சலப் பிரதேசம் (நாலகர் தொகுதி): பாஜக வேட்பாளர் கே.எல். தாக்கூர் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவாவை விட 8,990 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

-உத்தரகாண்ட் (பத்ரிநாத் தொகுதி): காங்கிரஸின் லக்பத் சிங் புடோலா வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜேந்திர சிங் பண்டாரியை விட 5,224 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

-உத்தரகாண்ட் (மங்களூர் தொகுதி): காங்கிரஸின் காசி முகமது நிஜாமுதீன் வெறும் 422 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கர்தார் சிங் பதானாவை வீழ்த்தியுள்ளார்.

-மத்தியப் பிரதேசம் (அமர்வாரா தொகுதி) - பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா கடும் போட்டுக்கு மத்தியில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் சா சுகாரம் தாஸை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.

-பீகார் (ரூபாலி தொகுதி): சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் ஆளும் ஜே.டி.யூ. வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டலை 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த அதிசயத்த பாருங்களேன்... காற்றைக் கடைந்து வெண்ணெய் எடுத்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பில் கேட்ஸ் செய்த மேஜிக்!

click me!