
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை 40 நாட்களில் ஏழாவது முறையாக பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. இவர் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையுத் தன்னைப் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள 24 வயது இளைஞர் விகாஸ் துபே தொடர்ந்து தன்னை பாம்பு கடித்துக்கொண்டே இருப்பதால் மருத்துவச் செலவுக்காக நிறைய பணம் செலவழித்துவிட்டதாகவும் அரசு தனக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்ற விகாஸ் துபே பாம்பு கடியை குணப்படுத்த நிறைய பணம் செலவாகிறது என்று கூறி நிவாரண உதவி வழங்கக் கோரி கதறி அழுதார். அதிகாரிகள் அவரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
தகதகவென மின்னிய நீதா அம்பானி! ரேகா ஸ்டைலில் அசர வைத்த ஹைதராபாத் குர்தா, காடா துப்பட்டா!
ஒவ்வொரு முறையும் பாம்பு விகாஸ் துபேவைக் கொத்தியபோது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரே நபரை பாம்பு தேடி வந்து கடிப்பது மிகவும் விசித்திரமானதாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
"அவரை உண்மையில் பாம்பு கடிக்கிறதா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரையும் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்பு கடித்துவிட்டதாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஒவ்வொரு முறையும், ஒரே நாளில் குணமடைந்துவிடுகிறார். வினோதமாக இருக்கிறது" என்று தலைமை மருத்துவ அதிகாரி குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். இதுபற்றி விசாரித்து மக்களுக்கு உண்மையைக் கூறுவோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.