நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் பாஜக கால் வைத்துள்ளது. திருச்சூர் தொகுதியில் கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் மகன் முரளிதரனை தோற்கடித்து நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி மீது முரளிதரன் அதிருப்தி அடைந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் திருப்பங்கள்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பலரும் எதிர்பாராத பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் அசூர பலத்தோடு பாஜக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமே அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி பாஜகவிற்கு ஷாக் கொடுத்து கூடுதல் தொகுதிகளை தட்டி பறித்தது.
undefined
இதே போல கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஆனால் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்று சாதித்துள்ளது. கேரளாவில் திருச்சூர் தொகுதியில் கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் கருணாகரன் மகன் முரளிதரன் போட்டியிட்டார்.
கேரளாவில் பாஜக
அவரை எதிர்த்து பாஜக சார்பாக சுரேஷ்கோபி களம் இறங்கினார். கடைசியில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்து பாஜக வெற்றி பெற்றது. இதனால் முரளிதரன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அரசியல் களத்தில் இருந்து விலகி இருக்க போவதாகவும் கூறியுள்ளார். திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபியின் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மூன்று முறை வந்தார். சுனில்குமாருக்காக பினராயி விஜயன் பிரசாரம் செய்தார். ஆனால், தனக்குடி.கே.சிவகுமாரைத் தவிர, எந்த தேசியத் தலைவர்களும் எனக்காக பிரசாரம் செய்ய வரவில்லை என வேதனை தெரிவித்திருந்தார்.
அதிருப்தியில் முரளிதரன்
வடகரை தொகுதியில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறிய அவர், சுரேஷ் கோபியின் பிரபலத்தை எதிர்கொள்ளவும், அவரது சகோதரி பத்மஜா வேணுகோபால் பாஜகவுக்கு மாறியதன் பாதிப்பைத் தணிக்கவும் கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் தலைமை தன்னை திருச்சூருக்கு மாற்றியதாகவும் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் மனநிலையை இழந்துவிட்டதால், இனி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார். இந்தநிலையில் உட்கட்சி மோதலால் தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள முரளிதரனை சமரம் செய்த காங்கிரஸ் மேலிடம் முயன்று வருகிறது. ஆனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.