சிக்னல் கட்.. விக்ரம் லேண்டர் & பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை.. இஸ்ரோ அதிர்ச்சி தகவல்

By Raghupati R  |  First Published Sep 22, 2023, 8:16 PM IST

பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் SLEEP MODE-இல் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

Tap to resize

Latest Videos

பிறகு அதில் இருந்து பிரிந்து சென்ற ரோவர்  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டது. நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்தது.

மேலும், பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றது. பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் நேற்று காலை 10.45 மணியளவில் சூரியன் உதிக்க தொடங்கியது. சூரியன் உதிக்க தொடங்கியதிலிருந்து லேண்டரையும், ரோவரையும் இயக்க வைக்க இஸ்ரோ முயற்சி செய்துவருகிறது.

தற்போது வரை லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிலிருந்து சிக்னல் வரவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும் சிக்னலை பெற முடியவில்லை. உறக்க நிலையிலிருந்து லேண்டர், ரோவரை எழுப்பும் பணிகள் தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே

click me!