ஜி20 குழுவினரை சந்திக்கும் பிரதமர் மோடி!

By Manikanda Prabu  |  First Published Sep 22, 2023, 4:40 PM IST

ஜி20 குழுவினரை சந்திக்கும் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்


ஜி20 அமைப்பின் தலைமை கடந்த ஆண்டு இந்தோனிசியாவிடம் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜி20 மாநாட்டுக்கான லோகோ, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் ஆகியவற்றை வெளியிட்டு, ஜி20 தலைமையை ஓராண்டுக்கு இந்தியா ஏற்று  நடத்தியது.

நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெற்ற நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டம், டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

Latest Videos

undefined

அதில், இந்தியா தலைமையிலான இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜி20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதில், கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அனைத்து தரப்பினரின் உழைப்பும் அடங்கியிருந்தது. வெளிநாட்டு விருந்தினர்களை உபசரித்து அவர்களை வாஞ்சையுடன் இந்தியா கவனித்துக் கொண்டது. உலகத் தலைவர்கள் வருகைக்காக டெல்லியே விழாக்கோலம் பூண்டது. அதற்கு ஏராளமானோரின் உழைப்பும் அடங்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1.06 கோடி பயனாளிகளுக்கு தனித்தனியாக லெட்டர் போட்ட ஸ்டாலின்!

இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை ஜி20 குழுவினரை சந்திக்கும் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். மாலை 6 மணிக்கு பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படும்.

இந்த கலந்துரையாடலில் ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3000 பேர் பங்கேற்க உள்ளனர். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அடித்தட்டு அளவிலிருந்து அனைத்து மட்டத்திலும் பணியாற்றியவர்கள் இதில் அடங்குவர். இதில் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த கிளீனர்கள், ஓட்டுநர்கள், வெயிட்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

click me!