உறக்கத்தில் இன்று மீண்டும் எழுந்திரிக்கும் விக்ரம் லேண்டர், ரோவர்: இஸ்ரோ நம்பிக்கை!

By Manikanda Prabu  |  First Published Sep 22, 2023, 11:13 AM IST

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை இன்று மீன்டும் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டன.

இதையடுத்து, ஆகஸ்ட் 23 தேதியன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி, மென்மையான தரையிறக்கப்பட்டது. முதலில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டதும், அதிலிருந்து தரையிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.

Tap to resize

Latest Videos

கனடாவில் தீவிரவாத சக்திகள்: ஜஸ்டின் ட்ரூடோ கட்சி எம்.பி. குற்றச்சாட்டு!

அதன் தொடர்ச்சியாக, நிலவில் ஒரு நாள் முடிந்ததும் (பூமியில் 14 நாட்கள்) லேண்டரும், ரோவரும் அணைக்கப்பட்டன. அதாவது, நிலவில் பகல் பொழுது முடிந்ததால், சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் ஸ்லீப் மோடில் (உறக்க நிலையில்) வைக்கப்பட்டன. நிலவில் இருள் சூழ்ந்ததால் கடந்த 2 வாரங்களாக லேண்டர், ரோவரின் செயல்பாடு  நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிலவில் இன்று பகல் பொழுது தொடங்கவுள்ளது. பகல் தொடங்கிய பிறகு நிலவின் மீது சூரியஒளி படும். அப்போது, சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழுந்து செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் உள்ள சோலார் பேனல் சூரிய ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இதற்கான முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செய்து வருகின்றனர்.

ஆனால், நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை தாங்குமா என தெரியவில்லை. இருப்பினும், லேண்டரும், ரோவரும் ஸ்லீப் மோடில் வைக்கப்படுவதற்கு முன்னர் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டது. உறக்க நிலையில் வைக்கப்படுவதற்கு முன்பு, வேறு ஒரு இடத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இடமும் மாற்றப்பட்டது.

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை விழித்தெழுமா என்பது கணிக்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், எப்படியும் அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். லேண்டரும், ரோவரும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் தகவல்களை இஸ்ரோ சேகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!