கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இந்திய அரசு இருக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்த நிலையில், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய செய்தி நிறுவனங்களுக்கு, இன்று வியாழக்கிழமை ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களை நேர்காணல் செய்வதைத் தவிர்க்குமாறு தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுரை வழங்கியது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டியது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், இந்த அறிவுரை வந்துள்ளது. இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் பல வலுவான நகர்வுகள் தொடர்ந்து, குருபத்வந் சிங் பண்ணு என்ற தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஒருவர், ஒரு தொலைக்காட்சி சேனலில் தோன்றி பேசியுள்ளார்.
undefined
வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு நபர், குறிப்பாக அவர் மீது பல கிரிமினல் வழக்குகளும் இருந்து வரும் நிலையில், மேலும் இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பில் இருக்கும் நபரை அழைத்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் பேசவைத்துள்ளதாகவும். அதில் அந்த நபர் நாட்டின் இறையாண்மை/ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அந்நிய மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு மற்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட பல கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது மற்றும் அரசியலமைப்பின் கீழ் அதன் உரிமைகளை மதிக்கிறது, ஆனால் டிவி சேனல்களால் ஒளிபரப்பப்படும் உள்ளடக்கம் பிரிவு 20ன் துணைப் பிரிவு 2 உட்பட 1995ம் ஆண்டு CTN சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கூறியவற்றின் அடிப்படையில், கடுமையான குற்றங்கள்/பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அத்தகைய பின்னணியில் உள்ள நபர்களைப் பற்றிய அறிக்கைகள்/குறிப்புகள் மற்றும் பார்வைகள்/நிகழ்ச்சி நிரல்களுக்கு எந்தவொரு தளத்தையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 வது பிரிவின் கீழ் நியாயமான கட்டுப்பாடுகள் மற்றும் துணைப்பிரிவு 2 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களைக் கருத்தில் கொண்டு, இதை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாரணாசி செல்லும் பிரதமர் மோடி: சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்!