சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இதைப்பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சந்திரயான்-3 விண்கலம் இப்போது 3வது சுற்றுப்பாதையில் உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்த சுற்றுப்பாதைக்கான நகர்வு நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடக்கும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, விண்கலத்தை முதல் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
NDA என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, நம்பிக்கை: புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான் 3 வெண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத தென் துருவப்பகுதியில் விண்கலத்தை மென்மையான தரையிறக்கம் செய்யும் செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டத்தை மேற்கொண்டிருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் விண்கலம் 3வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடிந்தது.
ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!