38 கட்சிகள் இணைந்துள்ள பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் 38 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை அவர்கள் ஒன்றிணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியதுடன், இந்தக் கூட்டணியை காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணி என்றும் வர்ணித்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியா முழுவதும் உள்ள எங்கள் மதிப்புமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடையது காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டணியாகும். இது மேலும் தேசிய முன்னேற்றம் மற்றும் பிராந்திய விருப்பங்களை நிறைவேற்ற முயல்கிறது" எனக் கூறியுள்ளார்.
ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!
டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி pic.twitter.com/UC5DZea8CT
— Asianetnews Tamil (@AsianetNewsTM)எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை
என்டிஏ கூட்டம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு இவ்வாறு ட்வீட் செய்த பிரதமர் தானும் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை வரவேற்றனர்.
டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி pic.twitter.com/kMLMMtzHHc
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி வருகையின்போது, தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதிமுக தவிர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!
பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு முடிந்துள்ள நிலையில், ஆளும் பாஜக தலைமையில் 38 தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் டெல்லியில் கூடியுள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (I-N-D-I-A) என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.