‘ஒரே ராக்கெட் மூலம் 82 செயற்கைகோள்கள்’ - விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 02:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
‘ஒரே ராக்கெட் மூலம் 82 செயற்கைகோள்கள்’ - விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

சுருக்கம்

வருகிற 2017-ம் ஆண்டு ஒரே நேரத்தில் 82 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை அனுப்பியது. இது தான் இதுவரை மிகப் பெரிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 2௦13ம் ஆண்டு மினோட்டார்-1 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 27 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்க 2வது இடத்தை பிடித்தது.

2016ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது இந்தியா.

இந்தநிலையில், உலக வரலாற்றிலேயே அதிக செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் அனுப்பும் புதிய சாதனையை இஸ்ரோ நிகழ்த்த உள்ளது.

அதாவது 2017-ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று ஒரே நேரத்தில் 82 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளது.

இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ள 82 செயற்கைகோள்களில் 60 அமெரிக்காவிலும், 20 ஐரோப்பாவிலும், 2 இங்கிலாந்திலும் தயாரிக்கப்பட்டது.

இந்த  82 செயற்கைகோள்களும் மண்ணில் இருந்து புறப்பட்ட 20 முதல் 25 நிமிடங்களில் சூரிய ஒளிவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

20 நிமிடங்களில் இந்த செயற்கைகோள்கள் 580 கி.மீ., தூரம் பயணிக்க உள்ளன. 2020ம் ஆண்டு மிக குறைந்த செலவில் செவ்வாய்க்கு இரண்டாவதாக எம்ஓஎம் - 2 என்ற செயற்கைகோளை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tirumala Free Bus Service: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இலவசமாக பயணிக்கலாம்
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?