செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ‘83 தமிழர்கள்’ கைது..!! – ரூ.65 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல்

 
Published : Oct 30, 2016, 12:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ‘83 தமிழர்கள்’ கைது..!! –  ரூ.65 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல்

சுருக்கம்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மண்டல வன அலுவலர் ரவிசங்கர் ரெட்டி, பறக்கும் படை காதர்பாஷா தலைமையில் நேற்று  தனிதனி குழுக்களாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது காஜிப்பேட்டை மண்டலம் லங்கமல்லாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செம்மரம் வெட்டி பதுக்கி கடத்த முயற்சி செய்தவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

பொதட்டூர் வனப்பன்டா, காஜிப்பேட்டை, பத்வேல், அகிய வெவ்வேறு இடங்களில் செம்மரம் வெட்டி கொண்டு வந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து 83 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ 65 லட்சம் மதிப்புள்ள 42 செம்மரங்கள் 4 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து ஆந்திர மண்டல வன அலுவலர் ரவிசங்கர்ரெட்டி கூறியதாவது,

இவர்கள் அனைவரும் மலைவாழ் மக்கள் என்பதும் அவர்ள் வசிக்கும் இடத்தல் சாமை மற்றும் தினை பயிர் வைப்பதாகவும் அவ்வாறு பயிர் செய்யப்படும் பொருட்கள் கிலோரூ 30 மட்டுமே விற்கப்படுகிறது. அனால் செம்மரம் வெட்ட 1 கிலோவிற்கு 600 வரை கடத்தல் கும்பல் வழங்குகின்றனர்.

அனைவரும் 30 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் என்பதால் உடல் வலிமையாகவும் உள்ளதால் ஒவ்வொரு வரும் 30 கிலோ எடை கொண்ட செம்மரத்தை 3 மணி நேரத்தில் வெட்டி வனப்பகுதியில் இருந்து கடத்தலுக்காக வனப்பகுதிக்கு வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் ஒருமுறை வனப்பகுதிக்கு செம்மரம் வெட்டி வெளியே வந்தால் ரூ 18 ஆயிரம் வரை பணம் கிடைக்கும் என்பதால் குறைந்த காலத்தில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் தொடர்ந்து செம்மரம் வெட்ட ஆந்திராவிற்கு வருவதாக ரவிசங்கர்ரெட்டி தெரிவித்தார்.

 

மேலும், செம்மரம் வெட்ட வருபவர்களை தடுக்க இரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் என்கவுண்டர் செய்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை. தவறு என்பதை எப்போது உணர்கிறார்களே அப்போதே செம்மரம் வெட்ட வருபவர்களை தடுக்க முடியும் இல்லையென்றால் தமிழகத்திலும், கர்நாடக மாநிலத்திலும் இருந்த உயர்ரக சந்தன மரங்கள் இல்லாமல் போனதோ அதே போன்று செம்மரமும் வருங்கால தலைமுறையினருக்கு போட்டோவில் மட்டுமே காண்பிக்கும் நிலை இருக்கும் என்பதால் செம்மரக்கடத்தலில் ஈடுப்படுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

20 ஆண்டுகளுக்கு பின் கை கோர்த்த தாக்கரே சகோதரர்கள்.. மகாராஷ்டிராவில் பரபரக்கும் அரசியல் களம்
டெல்லியில் 2 நாள் தங்கினாலே எனக்கு நோய் வருது.. காற்று மாசால் மனம் நொந்த நிதின் கட்கரி!