
ஒரே ராக்கெட் மூலம் 82 செயற்கைகோள்களை 2017-ம் ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. தகவல் தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 82 வெளிநாட்டு செயற்கைகோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் 60 அமெரிக்காவை சேர்ந்தது, ஐரோப்பாவைச் சேர்ந்த 20, மற்றும் 2 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள்களாகும்.
வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கை கோள்களை அனுப்பியதே உலக சாதனையாக உள்ளது.