புதுச்சேரி விடுதலை பெற்ற தினம் இன்று..!

 
Published : Nov 02, 2016, 05:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
புதுச்சேரி விடுதலை பெற்ற தினம் இன்று..!

சுருக்கம்

பிரான்ஸ் நாட்டின் ஆதிக்‍கத்தில் இருந்து புதுச்சேரி விடுவிக்‍கப்பட்டதன் விடுதலை தினம் இன்று கொண்டாட்டப்பட்டது. அங்கு நெல்லித்தோப்பு தொகுதிக்‍கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், இவ்விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது. 

கடந்த 300 ஆண்டுகளுக்‍கும் மேலாக பிரான்ஸ் நாட்டின் ஆதிக்‍கத்தில் இருந்து வந்த புதுச்சேரி, கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை பெற்றது. எனினும், அங்கு நாட்டின் சுதந்திர தினம் மட்டுமே கொண்டாடப்பட்டு வரும் போதிலும், விடுதலை தினம்  கொண்டாடப்படவில்லை.

இதனால், புதுச்சேரி - பிரெஞ்ச் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள், விடுதலை தினத்தை கொண்டாட வலியுறுத்தி, தொடர்ந்து நடத்திய போராட்டங்களையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 3-வது ஆண்டாக இம்முறையும் புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு, கடற்கரை சாலையில் மிகவும் எளிமையான முறையில் விடுதலை தினம் கொண்டாடப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!