இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024: இஸ்ரோ அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Feb 18, 2024, 11:58 AM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது


குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விண்வெளி மற்றும் பிரபஞ்சத்தின் மீது மோகம் உள்ளது. அவர்கள்  அனைத்து வான நிகழ்வுகளையும் பற்றி அறிய விரும்புவதுடன், அது பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர். இளம் உள்ளங்களின் இந்த ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" "யுவ விஞ்ஞானி கார்யக்ரம்" (யுவிகா) என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பதிவு செயல்முறை பிப்ரவரி 20 முதல் மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இளமையில் விண்வெளி ஆர்வத்தை ஊட்ட இஸ்ரோ இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்  அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் சீரமைக்கப்பட்ட வாழ்க்கையைத் தொடர அதிகமான மாணவர்களை இத்திட்டம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தை அவமதித்த பிரதமர் மோடி: ஆ.ராசா காட்டம்!

நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இரண்டு வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், கேன்சாட், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த திட்டம் 2019, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்கள் புவியியல் இருப்பிடங்களின் அடிப்படையில் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

click me!