சூரியனில் என்ன நடக்குது? ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

Published : Jun 10, 2024, 03:55 PM ISTUpdated : Jun 10, 2024, 04:00 PM IST
சூரியனில் என்ன நடக்குது? ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

சுருக்கம்

மே மாதம் சூரியனின் இயங்குநிலை எப்படி மாற்றம் அடைந்தது என்பதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படங்களை வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன.

சூரியனின் இயக்கத்தைக் காட்டும் விதவிதமான புதிய புகைப்படங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஏவப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த விண்கலம் பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ தொலைவுக்கு 125 நாட்கள் பயணித்தது. பின், எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆதித்யா எல்-1 எல்-1 புள்ளியை அடைந்தது. அதிலிருந்து சூரியனைப் பற்றி ஆய்வை ஆதித்யா எல்-1 மேற்கொண்டு வருகிறது.

3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!

ஆதித்யா -எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பும் தகவல்களை இஸ்ரோ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல்-1 படம் பிடித்த்து. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை சூரியனின் இயக்கநிலையை காட்டும் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

மே மாதம் சூரியனின் இயங்குநிலை எப்படி மாற்றம் அடைந்தது என்பதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படங்களை வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளைக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.

"ஆதித்யா எல்-1 இல் உள்ள SUIT மற்றும் VELC கருவிகள் மே 2024 இல் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளைப் படம்பிடித்துள்ளன" என்று இஸ்ரோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்பு புவி காந்த புயல்களுக்கு வழிவகுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

30 நிமிடத்தில் இலவச தரிசனம்... ரூ.20-க்கு 2 லட்டு.. 'ஸ்பெஷல் ஸ்டாட்' ஒதுக்கிய திருப்பதி தேவஸ்தானம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!