இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி வழங்கும் ஈஷா அறக்கட்டளை; சத்குரு வாழ்த்து!

Published : Aug 16, 2023, 05:36 PM ISTUpdated : Aug 16, 2023, 06:05 PM IST
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சி வழங்கும் ஈஷா அறக்கட்டளை; சத்குரு வாழ்த்து!

சுருக்கம்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்துடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை சார்பில் ராணுவ வீரர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் ஹத யோகா பயற்சி அளிக்கப்பட்டது.

"மன அழுத்த மேலாண்மை மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கான யோகா" திட்டத்தை ஈஷா அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்துடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை சார்பில் ராணுவ வீரர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் ஹத யோகா பயற்சி அளிக்கப்பட்டது.

9 மாநிலங்களில் உள்ள 23 இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஈஷா அறக்கட்டளையின் யோகா ஆசிரியர்களால் ஒரு வாரம் இலவச ஹத யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ராணுவ வீரர்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவம் நோக்கில் இந்த யோகா நிகழ்ச்சியை நடத்துவதாக ஈஷா தெரிவிக்கிறது.

60 வயது அரசு ஊழியரை மயக்கிய பெண்கள்! அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.82 லட்சம் அபேஸ்!

விழாவில் உரையாற்றிய காணொளி காட்சி மூலம் உரையாற்றிய சத்குரு, “வீரர்களாகிய நீங்கள் உங்கள் உடல் தகுதி மற்றும் நல்வாழ்வுக்காக போதுமான அளவு செய்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள்  மன ஆற்றலைக் கொண்டுவர, யோகா உதவி செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு இந்த யோக பயிற்சியை ஏற்கனவே அளித்துள்ளோம். மேலும் 300 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். இப்போது இதை ராணுவத்தின் தெற்கு கமாண்ட்டில் வழங்க விரும்புகிறோம்" என்று கூறினார்.

பின்னர், இந்த நிகழ்ச்சியைப் பற்றி ட்வீட் செய்த ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு, “தேசத்தைப் பாதுகாப்பதற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க ஆர்வத்துடன் முன்வரும் கிக உயர்ந்த பண்புக்கு நம் வீரர் வீராங்கனைகள் முன்னுதாரணமாக வழங்குகிறார்கள். சமநிலை, ஸ்திரத்தன்மை மற்றும் நல்வாழ்வை வளர்ப்பதற்கு அவர்களுக்கு உதவுவது மிக முக்கியமானது. " என்று கூறினார். ஈஷா கிளாசிக்கல் ஹத யோகா பயற்சி இந்திய ராணுவத்தின் தெற்குப் படை வீரர்களிடம்  ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்றும் வாழ்த்து கூறியிருக்கிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங், யோகா பயிற்சி விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ராணுவத்தில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், மனநலப் பிரச்சினைகளுக்கு யோகாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.

Chandrayaan-3: நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-3! லேண்டரை தனியாகப் பிரிக்கத் தயாராகும் இஸ்ரோ!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!
ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த அனுமதி! ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை!